செய்திகள்

குடியரசு தின ஒத்திகை ; மூன்று நாட்கள் மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்

74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர்
சாலையில் இன்று முப்படை வீரர்கள் மற்றும் போலீஸாரின் முதல் நாள் அணிவகுப்பு
ஒத்திகை நடைபெற்றது.

நாடு முழுவதிலும் வரும் 26-ம் தேதி 74 வது குடியரசு தின விழா கோலாகலமாக
கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழாவானது ஒவ்வொரு ஆண்டும்
நடைபெறும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தாண்டு மெட்ரோ பணிகள் காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டு உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறுகிறது. இதையொட்டி ஜனவரி 20, 22 மற்றும் 24-ம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் என்று காவல் துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இந்த 3 நாட்கள் மற்றும் வரும் 26-ம் தேதி மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசு தின விழாவுக்கான முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை இன்று
காலை மெரினா காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்றது. ஒத்திகை நிகழ்ச்சியிம் முதலாவதாக ஆளுநர், முதல்வர் வருவதுபோலவும், அவர்களுக்கு
மரியாதை செய்வதுபோலவும் ஒத்திகை நடத்தப்பட்டது.

இதில், முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த வருடம் பெண்கள் சிறப்பு காவல் படையின் கூட்டுக்குழு முரசு இசை நிகழ்ச்சியானது சேர்க்கப்பட்டுள்ளது.

பின்பு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளும்,பதக்கங்களும்,காசோலையும் வழங்குவது போல் நடைப்பெற்றது.மேலும் பள்ளி,கல்லூரி மாணவிகளின் மயிலாட்டம் காவடியாட்டம் பொய்க்கால் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. நாட்டுபுற கலைஞர்களும் வாத்தியங்கள் இசைப்போரும் பங்கேற்றனர். அதை தொடர்ந்து 20 துறை சார்ந்த அலங்கார ஊர்திகளும் கலந்துகொண்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை ஒளிப்பதிவு மூலம் உணரச் செய்தவர் கே.வி.ஆனந்த்

Halley Karthik

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துக: அன்புமணி ராமதாஸ்

Halley Karthik

உச்சநீதிமன்ற வழக்கு குறித்த பணிகள் உள்ளதால் இபிஎஸ்-ன் தென் மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து?

Web Editor