நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குடும்பத்தினரின் கோரிக்கைகளை ஏற்று போர்ச்சுகலில் உள்ள தனது வீட்டிற்கு தனிப்பட்ட முறையில் சமையல்காரரைக் கண்டுபிடித்து 4.5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்க தயாரக இருந்தும், வேலைக்கு சரியான ஆள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகீசிய அணியில் மிகவும் புகழ்பெற்ற நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ஆவார். கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் இவர் மட்டும்தான். 2022-ஆம் ஆண்டோடு தனது உலகக்கோப்பை விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்ற ரொனால்டோ, தனது குடும்பத்தினரோடு போர்ச்சுகலில் வசிக்க திட்டமிட்டு, அதற்காக கடந்த ஆண்டு குயின்டா டா மரின்ஹாவில் செப்டம்பர் 2021 இல் ஒரு இடத்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது. 37 வயதான ரொனால்டோ, அந்த இடத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு மிகவும் சந்தோசமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று, அங்கு ஒரு கனவு மாளிகையை கட்டி வருகிறார். மேலும் அவரது கனவு இல்லம் ஜூன் 2023 க்குள் முடிக்க தயாராக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரொனால்டோ கடந்த மாதம் சவுதி அரேபியாவிற்கு வந்து 2.5 வருட ஒப்பந்தத்தில் சவுதி அரேபிய கிளப் அல் நாஸ்ரில் இணைந்ததால் அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் அவரது காதல் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் மற்றும் அவர்களது குழந்தைகள் உடன் இருந்தனர். தற்போது குடும்பம் மொத்தமாக ரியாத்தின் மையத்தில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ரொனால்டோ தனது கனவு இல்லம் முடிவடைந்து, குடும்பத்தினரோடு அங்கு செல்கையில் போர்த்துகீசிய உணவுகள் மற்றும் சுஷி போன்ற சர்வதேச உணவுகளை சமைக்க தெரிந்த சமையல்காரர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பி மாதம் ஒன்றுக்கு 4,500 பவுண்டுகள் அதாவது இந்திய ரூபாயில் ரூ. 4 லட்சத்து 52 ஆயிரம் பண மதிப்பில் சம்பளம் கொடுக்க முடிவு செய்து, சிறந்த சமையல்காரர் ஒருவரை தேடி வருகிறாராம்.
இவருடன் அவரது நண்பர் ஜார்ஜினா ரோட்ரிகஸ்சும் பாரம்பரிய போர்த்துகீசிய உணவுகள் மற்றும் சுஷி போன்ற சர்வதேச உணவுகளை சமைக்க தெரிந்த சமையல்காரரை தேடி வருகிறார். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் படியான சமையல்காரரை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் மிகவும் சிரமம்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அல் நாசருக்கு ஒப்பந்தம் செய்த பிறகு சவுதி அரேபியாவில் தனது முதல் ஆட்டத்தில் ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தார். ரியாத்தில் நடந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைனுக்கு எதிரான நட்புரீதியான போட்டியில் சவூதி ஆல்-ஸ்டார் லெவன் அணியை போர்ச்சுகல் இன்டர்நேஷனல் வழிநடத்தியது. இருப்பினும், ஐரோப்பிய ஜாம்பவான்கள் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
பி. ஜேம்ஸ் லிசா