‘விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்’

திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்…

திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தீர்மானத்தின் மீது பேசிய அவர், கைதியின் மர்ம மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அண்மைச் செய்தி: ‘ தெற்கு ரயில்வேக்கு 2 லட்சம் அபராதம்; நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி’

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர். மு.க.ஸ்டாலின், சிறையில் இருந்த விசாரணை கைதி தங்கமணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடத்தவுடன், மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

காவல் மரணங்களில், கடைகோடி மனிதர்களுக்கும் அவர்களது மனித உரிமை காக்கப்பட்டு, உரிய நீதி கிடைத்திட இந்த அரசும், திமுகவும் என்றைக்கும் துணை நிற்கும் என, சென்னையில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.