மதுரை மத்திய சிறையில் கைதிகள், சிறைக்காவலர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில், மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் சிறை வளாகத்தில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் என சுமார் 1,513 பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது.
சிறைக்காவலர்கள், அதிகரிகள் 140 பேர் உட்பட சிறைக் காவலர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 263 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவை ஏற்று அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தெரிவித்துள்ளார்.







