முக்கியச் செய்திகள் தமிழகம்

‘பல்லாவரத்தில் விரைவில் புதிய மின் நிலையம்’ – அமைச்சர் செந்தில் பாலாஜி

தாம்பரம் கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பல்லாவரம் மின் கோட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. 4 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் இன்று கூடும் சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதாகவும், அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் விவாதங்களுக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று கூடிய சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய எம்.எல்.ஏ கருணாநிதி, பல்லாவரம் தொகுதி அஸ்தினாபுரம் பகுதியில், துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்’

இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2022-2023-ஆம் நிதியாண்டில் மாநிலம் முழுவதும் 100 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், பல்லாவரம் தொகுதி அஸ்தினாபுரம் பகுதியில் 33 KV புதிய துணை மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றும், கடந்த ஓராண்டில் 47 புதிய துணை மின் நிலையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், 6.65 லட்சம் மின் நுகர்வோரைக் கொண்ட தாம்பரம் கோட்டம், இரண்டாக பிரிக்கப்பட்டு பல்லாவரம் மின் கோட்டம் விரைவில் உருவாக்கப்படும் என்றும், அதை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடுவானில் கொரோனா தொற்று உறுதியான பயணி!

G SaravanaKumar

கேன்ஸ் விழாவில் அரை நிர்வாணப் போராட்டம்

EZHILARASAN D

“அதிமுக அலுவலகம் சூறையாடல்; ஓபிஎஸ்ஐ எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது”

G SaravanaKumar