டி 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேபடன் சிக்கந்தர் ராசா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. ரிங்கு சிங்கிற்கு பதிலாக சஞ்சு சாம்சனும் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அக்சார் பட்டேலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே போல் ஜிம்பாப்வே அணியில் கிரேம் என் க்ரீமருக்கு பதிலாக டினோடெண்டா மபோசா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்
இந்தியா : அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (சி), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜாஸ்ப்ரித் சக்கரவர்த்தி.
ஜிம்பாப்வே : தடிவானாஷே மருமானி (WK), பிரையன் பென்னட், டியான் மியர்ஸ், ரியான் பர்ல், சிக்கந்தர் ராசா (சி), டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிராட் எவன்ஸ், டினோடெண்டா மபோசா, ரிச்சர்லெஸ் முகரவானி.







