“சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் அனைத்து முருக பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்” – அண்ணாமலை!

சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் அனைத்து முருக பக்தர்களுக்கும் அண்ணாமலை வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்..

வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அறுபடை வீடுகளில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டு, சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் அனைத்து முருக பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சஷ்டி விரதத்தின் நிறைவாக, இன்று நடைபெறும் சூரசம்ஹாரத் திருநாளிலும், நாளை நடைபெறவிருக்கும் திருக்கல்யாண வைபவத்திலும், முருகப்பெருமானின் அருளால் அனைவரது வாழ்விலும் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகி, அன்பும் அமைதியும் வளமும் நிறைந்திடட்டும்.

வெற்றி வேல்! வீர வேல்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.