சஷ்டி விழாவை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு!

சஷ்டி விழாவை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மதுரையில் சஷ்டி விழாவை முன்னிட்டு பூக்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் இன்று மதுரை மல்லி கிலோ ரூ.1,200-க்கும், பிச்சி ரூ.500-க்கும், முல்லை ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் மதுரை மல்லி கிலோவுக்கு ரூ.300, பிச்சி ரூ.300, முல்லை ரூ.200 என விலை குறைந்துள்ளது. அதேசமயம், கனகாம்பரம் கிலோ ரூ.1,000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்ந்துள்ளது. பட்டன் ரோஸ் ரூ.300-க்கும், அரளி ரூ.500-க்கும், மரிக்கொழுந்து ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், செவ்வந்தி ரூ.120, செண்டு மல்லி ரூ.60, ரோஸ் ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.80 என விற்பனையாகிறது. தாமரை ஒன்று ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சஷ்டி விழாவை முன்னிட்டு பூக்கள் வாங்க பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பூக்கள் வரத்து குறைவினால் மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.