வங்கக் கடலில் வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நன்கு அடையாளப்படுத்தப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இன்று, 15 நவம்பர் 2026 காலை 05:30 மணி (இந்திய திட்ட நேரம்) நிலவரப்படி, இது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில், சுமார் 9.0° வடக்கு அட்சரேகை மற்றும் 86.9° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இது போர்ட் பிளேரிலிருந்து (அந்தமான் தீவுகள்) சுமார் 700 கி.மீ மேற்கு-தென்மேற்கேயும், சென்னையிலிருந்து (தமிழ்நாடு) 860 கி.மீ கிழக்கு-தென்கிழக்கேயும், விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) 1040 கி.மீ தெற்கு-தென்கிழக்கேயும், கோபால்பூரிலிருந்து (ஒடிசா) 1160 கி.மீ தெற்கு-தென்கிழக்கேயும் அமைந்துள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 16 நவம்பர் அன்று தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடலில் ‘சூறாவளி புயலாக’ (Cyclonic Storm) வலுவடையக்கூடும். மேலும், 17 நவம்பர் 2026 அன்று மேற்கு-மத்திய வங்கக் கடலில் இது ‘தீவிர சூறாவளி புயலாக’ (Severe Cyclonic Storm) வலுவடைய அதிக வாய்ப்புள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.