INDvsIRE: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!

இந்தியா அயர்லாந்து இடையிலான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.


இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் (ஜூன் 26) நடைபெற்றது. இதில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெல்பாஸ்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.

இன்றைய ஆட்டத்தில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (wk), இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (c), திலக்வர்மா, சிவம் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், இளவரசர் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி முதல் டி20 போட்டியில் ஆடாத நிலையில், இன்றைய போட்டியில் அணியில் இடம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி இன்றைய ஆட்டத்திலும் அணியில் இடம் பெறாதது ஏமாற்றமளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.