இந்தியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த ராஜா என்ற புலி வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தது.
இந்தியாவின் தேசிய விலங்கு புலியாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறைய தொடங்கியதையடுத்து புலிகளை பாதுகாக்க பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. பல திரைநட்சத்திரங்கள் புலிகளை தத்தெடுத்துக்கும் வழக்கமும் ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில இந்தியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த ராஜா என்ற புலி இன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளது. மொத்தம் 25 ஆண்டுகள் 10 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் வாழ்ந்த அந்த புலி மேற்குவங்கத்தில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பு மையத்தில் உயிரிழந்துள்ளது.
India's longest surviving tiger passes away
Read @ANI Story | https://t.co/jvd959oyJi#TigersInIndia #WestBengal #Tigers #Wildlife pic.twitter.com/GQA0kDcCOV
— ANI Digital (@ani_digital) July 11, 2022
இந்த புலி கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடக்கு வங்காளத்தில் உள்ள ஜல்தபாராவில் உள்ள கைராபரி சிறுத்தை, புலி பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த மையத்திற்கு வரும் போது அதற்கு வயது 11 ஆகும். முதலை கடித்து சிகிச்சை பெற இந்த மையத்திற்கு இந்த புலி கொண்டு வரப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை மற்றும் பராமரிப்பு காரணமாக புலி நலமுடன் வாழ்ந்தது. தற்போது வயது மூப்பின் காரணமாக 25வது வயதில் உயிரிழந்துள்ளது. இந்த புலிக்கு வனத்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.