கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட விழுப்புரம்-பாண்டிச்சேரி ரெயில் போக்குவரத்து மீண்டும் இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த ரெயில்கள் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக பயணிகளின் கோரிக்கையை ஏற்று முன்பதிவு செய்து பயணம் செய்யும் அதிவிரைவு ரெயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் அந்த ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் (அன்ரிசர்வ்டு பெட்டிகள்) இணைத்து இயக்கப்பட்டது. பின்னர் தலைநகரான சென்னையில் மட்டும் Passanger Train இயக்கப்பட்டது.

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு ஏற்கனவே தினமும் அதிகாலை 5.25 மணிக்கும், மதியம் 2.25 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ரெயில்களின் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று அதிகாலை 5.25 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும் பயணிகள் ரெயிலை மட்டும் இயக்கம் தற்போது தென்னக ரெயில்வே நிர்வாகம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.







