முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்தியாவின் கஞ்சா தலைநகரம் தமிழ்நாடு – அண்ணாமலை குற்றச்சாட்டு

இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழ்நாடு உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

 

தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் வருவதாகவும், இதில், மத்திய அரசுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும் அமைச்சர் பொன்முடி அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி பதிலுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

அதில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் உச்சத்தில் உள்ளதாக சாடியுள்ளார். போதைப்பொருள் புழக்கம் பற்றி பேசிய அமைச்சர் பொன்முடி, மது ஆலை நடத்தி வரும் ஜெகத் ரட்சகன், டி.ஆர்.பாலு ஆகியோரையும் உடனிருத்தி செய்தியாளர்களை சந்தித்திருந்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப்பில் வரும் பொய்யான தகவல்களை வைத்து அமைச்சர் பேசியது வேடிக்கையானது என குறிப்பிட்டுள்ளார்.

 

2021-ம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னரே தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலும் போதைப்பொருட்கள் பிடிபடுகிறது. அது என்ன தனியார் துறைமுகமா? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, சமூகவலைதளங்களில் திமுகவினர் பரப்பும் பொய்களை சேகரித்து ஒரு செய்தியாளர் சந்திப்பை அமைச்சர் நடத்தியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்தான் தமிழ்நாட்டில் எட்டுத்திக்கும் கஞ்சா அமோகமாக விற்பனையாகிறது. தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க மத்திய அரசின் மீது பழிபோடுவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலில் தாங்கள் நடத்தும் மது ஆலைகளை மூடிவிட்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என தெரிவித்த அவர் இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழ்நாடு உள்ளதாகவும், திமுக-வின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் மக்களை ஏமாற்றாமல் இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் என்றும் அண்ணாமலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹாலிவுட் நடிகை செலினா கோம்ஸ் பிறந்தநாள் இன்று

Gayathri Venkatesan

திருவண்ணாமலை அருகே கணவரை இழந்த பெண் கொலை

Jeba Arul Robinson

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா – நாளை தொடக்கம்

EZHILARASAN D