இந்து மக்கள் கட்சி நிர்வாகி பைக் மர்ம நபர்களால் தீவைத்து எரிப்பு

திண்டுக்கல் குமரன் திருநகரில் இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் வீட்டு வாசல் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவர்…

திண்டுக்கல் குமரன் திருநகரில் இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் வீட்டு வாசல் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.

இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் மோகன் குமார் .இவர் திண்டுக்கல் குமரன் திருநகரில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பாதுகாப்பிற்கு அங்கு தங்கியுள்ளார் .நள்ளிரவு நேரத்தில்அவரது இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது பதறியடித்து வந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீயினால் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூறும் போது மர்ம நபர்கள் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை அச்சம் அடையச் செய்வதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டு உள்ளனர் அந்த மர்ம நபர்களை கண்டுபிடித்து கைது செய்யப்பட வேண்டும் அதுவரை இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல மாட்டோம் என தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.