முக்கியச் செய்திகள் கொரோனா

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செப்டம்பர் முதல் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது: ரஷ்ய நிறுவனம் அறிவிப்பு

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் சீரம் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ரஷ்யாவில் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் நேரடி முதலீடு நிதி நிறுவனம் கூறியிருக்கிறது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “புனேவில் உள்ள இந்திய சீரம் மையத்தில் செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 300 மில்லியன் தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை சீரம் நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. சீரம் நிறுவனத்துக்கு தடுப்பூசி தயாரிப்பதற்கான செல் மற்றும் மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை கொண்டு தடுப்பூசி தயாரிப்பதற்கனா முதல் கட்டப்பணியில் சீரம் நிறுவனம் ஈடுபட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இது குறித்து சீரம் மையத்தின் தலைவர் அதார் பூனாவாலா கூறுகையில், “ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பது மகிழ்யளிக்கிறது. வரும் மாதங்களில் லட்சகணக்கான தடுப்பூசிகளை தயாரிப்போம். பரிசோதனை அடிப்படையிலான தயாரிப்புகள் செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கும்,
சிறந்த பாதுகாப்பு மற்றும் உயர்ந்த பட்ச திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஸ்புட்னிக் தடுப்பூசி முழு அளவில் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு கிடைக்கும்,” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

EZHILARASAN D

மாட்டிறைச்சி விற்கக்கூடாது என எச்சரித்த வட்டாட்சியர் இடமாற்றம்

EZHILARASAN D

புதுச்சேரி அரசுக்கு விசிக எம்பி கோரிக்கை

G SaravanaKumar