முக்கியச் செய்திகள் விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு

அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வரவுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்திய டி20 கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.

இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பிறகு, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு இந்த வீரர்களைத் தேர்வு செய்தது. ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயஸ் ஐயர், ஹார்திக் பாண்டியா, யுவேந்திர சஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், புவனேஸ்வர் குமார், ரவி பிஷ்ணோய், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் உள்பட 18 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசி வரும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது உம்ரான் மாலிக்குக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்காக அதிரடியாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் இந்தத் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. “இன்னும் இந்திய அணியில் சாதிக்க வேண்டியது இருக்கிறது” என்று கூறிய சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கி பிசிசிஐ கெளரவித்துள்ளது. வேகப் பந்துவீச்சைப் பொருத்தவரை புவனேஸ்வர் குமார் ஒருவர் மட்டுமே அனுபவம் வாய்ந்தவராக உள்ளார்.
சுழற்பந்துவீச்சுக்கு யுவேந்திர சஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகியோர் உள்ளனர்.
அறிமுக ஆட்டத்திலேயே லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு கொண்டுவந்தவர் கே.எல்.ராகுல். அதனால், ஐபிஎல் தொடரில் அவருக்கு கிடைத்துள்ள அனுபவம் நிச்சயம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் பயன்படும் என்று நம்பலாம். ஜூன் 9 முதல் ஜூன் 19ஆம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நேரம் இருப்பதை பொறுத்து அனைத்து கட்சியினரும் பேச வாய்ப்பு: சபாநாயகர் அப்பாவு உறுதி

Halley Karthik

ஹைதராபாத்தில் காதல் திருமணம் செய்தவர் குத்திக் கொலை

Halley Karthik

புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்துப் போட்டி?

Gayathri Venkatesan