மும்பை பங்கு சந்தை நேற்றைய சரிவில் இருந்து மீண்டு இன்று சற்று உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்றது.
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு நேற்றைய சரிவில் இருந்து மீண்டு உயர்வை அடைந்தது. அதன்படி, சென்செக்ஸ் குறியீடு 487.49 புள்ளிகள் அதாவது 0.84 சதவீதம் என்ற அளவில் உயர்வடைந்து 58,460.11 புள்ளிகளாக உள்ளது.
இதேபோல் தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் 154.95 புள்ளிகள் அல்லது 0.89 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து 17,467.85 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. நேற்று நிப்டியில் உள்ள அனைத்து நிறுவன பங்குகளும் சிவப்பு குறியீட்டுகளாகவே காணப்பட்டன. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி 47 நிறுவனங்கள் லாப நோக்கை காட்டும் வகையில் பச்சை நிறத்துடன் காணப்படுகின்றன. 3 நிறுவனங்கள் மட்டுமே சிவப்பு நிறமுடன் காணப்பட்டன.
இதுகுறித்து நிதி சேவை நிறுவனத்தின் தலைவர் ஒருவர் கூறுகையில், இந்திய பங்கு சந்தைகள் சரிவில் இருந்து மீட்சியடைந்ததற்கான பிரதிபலிப்பு இது. இதனை பாராட்ட வேண்டியது முக்கியம். நிதி துறை, தானியங்கி, தொலை தொடர்பு உள்ளிட்ட துறைகள் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வலுவாக உள்ளன என கூறியுள்ளார்.







