போக்குவரத்து ஊழியர்களுக்கு பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும் – வைகோ

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும் என அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.   மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும் என அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து அதிமுக அரசால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

போக்குவரத்துக் கழகங்களின் கடன் மற்றும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி காலம் தாழ்த்திக் கொண்டிருந்தார்கள். தற்போது திமுக தலைமைலான ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இறுதியாக கடந்த 24-ம் தேதி ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பஞ்சப்படி 2015-ஆம் ஆண்டிலிருந்து தரப்படவில்லை. எனவே, தொழிலாளர்களின் சிரமங்களைப் போக்குவதற்கு ஏதுவாக பஞ்சப்படி எனும் DA வை விரைவில் அளித்திடுமாறு தமிழ்நாடு அசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.