இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒத்திவைக்கப்பட்ட ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் இன்று விளையாடி வருகிறது. பின்னர், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது.
ஜூலை 7 ஆம் தேதி டி20 போட்டிகளும், அதனை அடுத்து ஜூலை 12 ஆம் தேதி ஒருநாள் தொடர்களையும் விளையாட திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி நேற்றைய தினம் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம், இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இரு தொடர்களுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டி20 அணி – முதல் போட்டிக்கான வீரர்கள் பட்டியல்
ரோஹித் சர்மா ( கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ், சஞ்சு சாம்சன், சூரியகுமார்
யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (wk), ஹர்திக்
பாண்டியா, வெங்கடேஷ் ஐயர்,. யஸ்வேந்திர சஹால், அக்சர் படேல், ரவி பிஷ்னாய்,
புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
இந்திய டி20 அணி – இரண்டாம் மற்றும் மூன்றாம் போட்டி
ரோஹித் சர்மா ( கேப்டன்), இஷான் கிஷன், விராத் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக்
ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் (wk), ரிஷப் பண்ட் (wk), ஹர்திக்
பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யஸ்வேந்திர சஹால், அக்சர் படேல், ரவி பிஷ்னாய்,
புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
இந்திய ஒருநாள் அணி – 3 போட்டிகள் கொண்ட தொடர்
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், இஷான் கிஷன், விராத் கோலி, சூர்ய குமார் யாதவ்,
ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (wk), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷார்துள்
தாகூர், யஸ்வேந்திர சஹால், அக்சர் படேல், ஜாஸ்பிரித் பும்ரா, பிரசித்
கிருஷ்ணா, முஹம்மது ஷமி, முஹம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங்
-மணிகண்டன்








