கொரோனாவிலிருந்து மீண்டு வந்த ரோகித்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி உள்ளூர் அணியுடன் இணைந்து கடந்த 23-ம் தேதி பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடியது. அதில் ரோஹித் பங்கேற்றார்.  அதைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா உறுதியானது.

இதன்காரணமாக, இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா விளையாட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோகித் சர்மா, தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ரோகித் சர்மா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்தபோது ‘நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்ததையடுத்து இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற உள்ள முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் ரோஹித் சர்மா வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.