முக்கியச் செய்திகள் தமிழகம்

தரமான கல்வியை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வழங்குகிறது – துணைவேந்தர்

நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள் போன்றவற்றுடன் தரமான கல்வியை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வழங்கி வருவதாக துணைவேந்தர் மாலினி வி சங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாலினி வி சங்கர், தொலைநோக்கு திட்டத்தின் படி இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.

கடல்சார் பயிற்சி நிறுவனங்களில், சேர்க்கைக்கு விரும்பும் மாணவர்களை வரவேற்பதோடு, அத்தகைய திறன் மிக்கவர்களை வணிக கப்பல் நிறுவனங்களுக்கு பணியமர்த்தவும் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தார்.

இந்தாண்டு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கூறிய அவர், நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள் போன்றவற்றுடன் தரமான கல்வியை இந்திய கடல்சார் பல்கழைக்கழகம் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

ஏடிஎம் கொள்ளையனுக்கு 7 நாள் போலீஸ் காவல்

Saravana Kumar

சசிகலா டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர் குழு இன்று முடிவு!

Jayapriya

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றார்!

Jayapriya