முக்கியச் செய்திகள் இந்தியா

தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு

தொலைத்தொடர்புத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவிகிதமாக அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரியவத்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறுகையில், இதற்கு முன்னர் 49 சதவிகிதமாக இருந்த அந்நிய நேரடி முதலீடு தற்போது 100 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்புத்துறை குறித்த இன்றைய அறிவிப்பில், “இத்துறைக்கான வரைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இத்துறையின் விரிவான தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்புகள் இருக்கும்.” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு சீனா மற்றும் பாகிஸ்தானின் முதலீட்டாளர்களுக்கு பொருந்தாது என்றும் அமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த முதலீடுகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதல் பெற வேண்டும் என்கிற கட்டுப்பாடு இருந்தது. தற்போது இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அதேபோல முன்னர் 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட்ட அலைக்கற்றையின் ஏலம் கால அளவு தற்போது 30 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அலைக்கற்றையை பகிர்ந்துக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த பகிர்தல் முற்றிலும் இலவசமாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு 4 ஆண்டுகள் வரை நிலுவைத்தொகைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், தொகையை திருப்பி செலுத்தும்போது 2 சதவிகித வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் அமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு?

Saravana Kumar

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை!

Saravana

கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்: நடிகர் கைது!

Halley karthi