துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
துருக்கி – சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது.
அண்மைச் செய்தி : ’திமுகவிற்கும் இபிஎஸ்-க்கும் ஈரோடு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ – டிடிவி தினகரன்
இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நாள் முதல் மாயமான விஜயகுமார் என்ற இந்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படும் இவர், பெங்களூரில் பணிபுரிந்து வந்த நிலையில் துருக்கிக்கு தொழில் நிமித்தமாக சென்றுள்ளார். கடந்த 6ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட நாள் முதல் இவர் மாயமான நிலையில் அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மலாத்யா எனும் பகுதியில், உணவக கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்படுவது எதனால்?…துருக்கியை போல் இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படுமா?…