”இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி பேச்சு

இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து சென்றார். அங்கு கேம்பிரிட்ஜ்…

இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து சென்றார். அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் “21ம் நூற்றாண்டில் கேட்பதற்கு கற்றுக் கொள்ளுதல்” என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: அடக்குமுறை சூழலுக்கு எதிராக ஜனநாயக சூழலை உருவாக்க நமக்கு புதிய சிந்தனைகள் தேவை. அதைப்பற்றி மாணவர்களாகிய நீங்கள் ஆலோசனை நடத்த வேண்டும். அதிக எண்ணிக்கையிலான அரசியல் தலைவர்களின் செல்போன்கள் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது. என்னுடைய செல்போன் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்படுவதாக தெரிவித்த உளவுத்துறை அதிகாரிகள் என்னை அழைத்து, அழைத்து செல்போனில் பேசும் போது கவனமாக இருங்கள் என்று தெரிவித்தனர். என்னுடைய செல்போன் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது. இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

அண்மைச் செய்தி: வீடுகட்டுவதற்கான நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை – தமிழ்நாடு அரசு

எதிர்க்கட்சி என்ற வகையில் ஊடகங்கள் மீதும் ஜனநாயக கட்டமைப்பின் மீஇதும் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படும் போது மக்களுடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.