கொரோனா மாதிரியான நோய்களின் அச்சுறுத்தல் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் கவிஞர் மாளிகையில், உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை தலைமை விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன் நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டியில் கூறியுள்ளதாவது: கொரோனா பரவலுக்குப் பிறகு உலகில் தொழில்நுட்பம் அதிகமாகியுள்ளது, அறிவியல் வளர்ந்துள்ளது, விழிப்புணர்வு மற்றும் விரைவாக நோய்களை கண்டுபிடிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: ”இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி பேச்சு
கொரோனா மாதிரி உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோய்களின் அச்சுறுத்தல் கண்டிப்பாக இருந்துகொண்டே உள்ளது. ஹெச் ஐ வி – குரங்கிலிருந்து மாணவர்களுக்கு மாறியதாக தகவல் உள்ளது. சார்ஸ் பரவியுள்ளது, எபோலா வருடம் வருடம் வருகிறது. வைரஸ் தொடர்ந்து தன்னை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல, அதன் பரவலுக்கான திறன் கூடிக்கொண்டே உள்ளது.
விலங்கிடமிருந்து மனிதனுக்கு நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளது. வனப்பரப்பு குறைந்து வருவதனாலும் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார்.
-ம.பவித்ரா








