நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் நரிக்குறவர்களுக்கு இலவச கண் சிகிச்சை

நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் நரிகுறவர் சமுகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு நிர்மல் கண் மருத்துவமனை மூலம் இலவச சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாம்பரத்தை அடுத்த மப்பேடு நரிக்குறவர் காலனியில்…

நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் நரிகுறவர் சமுகத்தில் ஒரே குடும்பத்தை
சேர்ந்த 5 பேருக்கு நிர்மல் கண் மருத்துவமனை மூலம் இலவச சிகிச்சை
மேற்கொள்ளப்பட்டது.

தாம்பரத்தை அடுத்த மப்பேடு நரிக்குறவர் காலனியில் சுமார் 100க்கும் மேற்பட்ட
நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு நியூஸ் 7 அன்பு
பாலம் மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கண் பாதிப்பு நோய் ஏற்பட்டிருந்தது.

இதுதொடர்பாக நியூஸ்7 தமிழ் செய்தியாளரை தொடர்புகொண்டு சிகிச்சைக்கு உதவுமாறு நரிக்குறவர் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் தாம்பரத்தில் உள்ள நிர்மல் கண் மருத்துவமனையில் 5 பேருக்கும் இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையும் படிக்க: தலைமை தகவல் ஆணையராக இறையன்பு? – முதல்வர் ஆலோசனை

அதைத்தொடர்ந்து, நிர்மல் கண் மருத்துவமனை இயக்குனர் நிர்மல் பேட்டரிக்
தலைமையில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேருக்கும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 பேருக்கு மாலைக்கண் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் நிர்மல் கண் மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டது. நியூஸ்7 தமிழ் மூலம் தொடர் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.