இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ராகுல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 கிரிக்கெட் அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்கா மற்றும் கரீபியனில் உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது. இதனை பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். இந்நிலையில், கே.எல்.ராகுலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 29ம் தேதி தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் ராகுல் விளையாடமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு விட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.