இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று தொடங்குகிறது.
வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒரு நாள் போட்டிகள் 22, 24 மற்றும் 27ந்தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிகள் டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது.
ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில், ஷிகர்தவான் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணைக்கேப்டனாகவும், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் விக்கெட் கீப்பர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், முகமது சிராஜ், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீல் அணியில், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஷமர் ப்ரூக்ஸ், கீசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், கீமோ பால், ரோவ்மேன் பவல், ஜெய்டன் சீல்ஸ் – ரிசர்வ்ஸ் – ரோமரியோ ஷெஃபர்ட் , ஹேடன் வால்ஷ் ஜூனியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒரு நாள் போட்டியை தொடர்ந்து 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த டி20 போட்டிகள் வரும் 29ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதல் டி20 போட்டி 29ம் தேதி பிரைன் லாரா மைதானத்திலும், 2வது மற்றும் 3வது டி20 போட்டிகள் ஆகஸ்ட் 1ம் தேதி வார்னர் பார்க் மைதனாத்திலும், 4 மற்றும் 5வது டி20 போட்டிகள் சென்ட்ரல் ப்ரோவாடு ரீஜினல் பார்க் மைதானத்திலும் நடைபெற உள்ளது.







