தமிழகத்தில் மேலும் 2312 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 17,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 2,682 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தத் தகவல் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 618 பேர் இன்று கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 370 பேருக்கும், திருவள்ளூரில் 168 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக கோவையில் 153 பேருக்கும், நெல்லையில் 68 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்து. ஆனால் தற்போது ஆங்காங்கே கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதால் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களிடம் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.