உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சம்பவம் எதிரொலியால் 1 கோடி ரூபாய் மதிப்பில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. வீர வசந்தராயர் மண்டப பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், மண்டபம் முழுமையாக இடிந்து சேதமடைந்தது. தீ விபத்து சம்பவம் எதிரொலியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தற்காலிகமாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இடம் தேர்வு செய்யும் பணியில் இழுபறி ஏற்பட்டு வந்ததால் கட்டுமானப் பணி தாமதமாகி வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு சித்திரை வீதி கீழச்சித்திரை வீதி சந்திப்பில் இடம் தேர்வு தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. புதிய தீயணைப்பு நிலையத்தை 2023ஆம் ஆண்டுக்குள் கட்டுமானப் பணி முடித்து பயன்பாட்டுக்குத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை வீட்டு வசதி கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
-ம.பவித்ரா