டிஎன்பிஎல் கிரிக்கெட்-சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (tnpl) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 25ஆவது லீக் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி…

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (tnpl) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 25ஆவது லீக் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சேலம் எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 7.15 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து,விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் வீரர் சசிதேவ் 45 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். திருப்பூர் பந்துவீச்சாளர் ஏ சிறிஸ்ட் 3 விக்கெட்டுகளையும் மோகன் பிரசாந்த், மணிகண்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திருப்பூர் அணி, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகலையும் பறிகொடுத்து 73 ரன்களில் சுருண்டது.

கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா மட்டுமே 25 ரன்களை எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இறுதியில் அந்த அணி 73 ரன்களில் ஆட்டமிழந்தது.
ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்தபடியாக சண்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சேப்பாக் அணிக்கு இது 5வது வெற்றியாகும். திருப்பூர் அணிக்கு இது 4வது தோல்வியாகும்.

சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.