முக்கியச் செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது.கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹார்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், சஹல் 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இந்தியா 42.1 ஓவரில் 261 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 125 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

ஒரு நாள் தொடரில் முதல்முறையாக சதம் பதிவு செய்து ரிஷப் பண்ட் அசத்தினார். முதல் ஆட்டத்தில் இந்தியாவும், இரண்டாவது ஆட்டத்திலும் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது ஆட்டத்தில் வென்றதைத் தொடர்ந்து 2-1 என்ற கணக்கில் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.

ஆட்டநாயகனாக ரிஷப் பண்டும், தொடர் நாயகனாக ஹார்திக் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டனர். டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு ஊழியர்கள் ஜூலை 1-க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: தமிழிசை

Gayathri Venkatesan

உலகின் முன்னணி நாடாக உருவெடுக்கும் வாசலில் இந்தியா நிற்கிறது – வெங்கையா நாயுடு

EZHILARASAN D

சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி

G SaravanaKumar