இந்தியா- நியூசிலாந்து `ஏ’ டெஸ்ட் போட்டி : மழையால் 3-வது நாள் ஆட்டம் ரத்து!

இந்தியா `ஏ’ அணி முதல் இன்னிங்சில் 464 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்தியா- நியூசிலாந்து ஏ' அணிகளுக்கு இடையிலான 3-வது அதிகாரப்பூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி லிங்கனில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ஏ’ அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் 102 ரன்களும், சாய் சுதர்சன் 88 ரன்களும் விளாசினர். துருவ் ஜூரல் 71 ரன்களும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 81 ரன்களும் எடுக்க இந்தியா `ஏ’ முதல் இன்னிங்சிலவ் 5 விக்கெட் இழப்பிற்கு 464 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் நியூசிலாந்து `ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்திருந்தது.. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்க இருந்தது. ஆனால் கனமழை காரணமாக போட்டியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 3-வது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பும்ரா இந்த போட்டியை பயிற்சி போட்டியாக எடுத்துக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.