செனகலின் கெபெமர் மாகாணத்தின் உள்ள லியோனா மற்றும் தியெப் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு குடியேற ஆபத்தான அட்லாண்டிக் கடலை கடக்க முயன்று வருகின்றனர். அந்த வகையில் ஏராளமானோர் படகு ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
இதனிடையே டாக்கருக்கு வடக்கே 180 கிமீ தொலைவில் கெபெமர் கடற்பகுதியில் சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. இதில் 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்து தங்கள் அறிந்து சென்ற மீட்பு படையினர் மூலம் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன.
ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார். படகில் மொத்தம் எத்தனை பேர் இருந்தனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள செனகல் உள்துறை அமைச்சகம், பயணித்தவர்களின் எண்ணிக்கை முழுமையாக தெரியாததால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறி இருக்கிறது.




