ரூ.17.99 கோடியில் அரசு பேருந்துகளில் இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தும் பணி – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

ரூ.17.99 கோடியில் அரசு பேருந்துகளில் இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தும் பணிக்கு முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.

ரூ.17.99 கோடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அவசர உதவி பொத்தான்கள் பொருத்தும் பணிக்கு முதலமைச்சர் விஜய் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும். இயக்கத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும். ரூ.17.99 கோடி மதிப்பீட்டில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் (Vehicle Location Tracking Device) மற்றும் அவசர உதவி பொத்தான்களைப் (Panic Buttons) பொருத்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் 08.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் போவையில் அறிவிப்பு வெளியிட்டார்கள். இதன்படி, எட்டு போக்குவரத்துக் கழகங்களின் 13,490 வாகனங்களில் இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகளும். 13,776 அவசா உதவி பொத்தான் தொகுப்புகளும் பொருத்திட எதுவாக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள். போக்குவரத்துக் கழங்களுக்கு ரூ.17.99 கோடி விடுவிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.

AIS 140 தாநிலையிலான இக்கருவிகள் மையக் கண்காணிப்பு அமைப்புடன் (Central Control Centre) இணைக்கப்படும். இதன் மூலம் பேருந்தின் இருப்பிடம். இயக்க வேகம், நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படுதல் மற்றும் அவசர எச்சரிக்கைகள் ஆகியவற்றை நிகழ்நோத்தில் கண்காணிக்க இயலும். இதனால் இயக்க மேற்பார்வை மேம்படுவதுடன், தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் வழிவகுக்கும்.

பயணத்தின்போது அவசர உதவி தேவைப்படும் நேரங்களில் அவசர உதவி பொத்தானை அழுத்துவது மூலமாக கட்டுப்பாட்டு மையத்திற்கு உதவியினை கோரிட இயலும். அதனடிப்படையில் வாகனத்தின் இருப்பிடத்தை உடனடியாக அறிந்து, காவல்துறை மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து விரைவான உதவி வழங்க இவ்வமைப்பு வழிவகுக்கும்.

பயணிகளின் பாதுகாப்பு, அவசரகால உதவி மற்றும் இயக்கக் கண்காணிப்பை ஒருங்கிணைக்கும் இந்த நடவடிக்கை, மகளிர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள வழிவகுக்கும். இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.