கே.எல்.ராகுல், ஜடேஜா அபாரம் – முதல் ஒருநாள் போட்டியை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்றும் மும்பையில்…

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்றும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 35.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 81 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் முகமது சமி, சிராஜ் தலா  3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் தடுமாற்றத்தை சந்தித்தனர். இஷான் கிஷான் 3 ரன்களும் விராட் கோலி 4 ரன்களும் சூர்யகுமார் யாத ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். ஆனால் அடுத்து வந்த கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்டியா 25 ரன்களுடன் வெளியேறிய பிறகு ஜடேஜா கே.எல்.ராகுலுடன் சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

அண்மைச் செய்தி: மணீஷ் சிசோடியாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

39.5 ஓவரிலேயே இந்திய அணி 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. கே.எல்.ராகுல் 75 ரன்களுடனும் ஜடேஜா 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.