புதிதாக புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. அதற்கான டிக்கெட்டுகள் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.
சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் க்புதிதாக கட்டப்பட்ட கேலரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த கேலரிக்கு கலைஞர் எம்.கருணாநிதி ஸ்டாண்ட் என பெயர் சூட்டப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை
சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஶ்ரீகாந்த், இந்தியா சிமெண்ட் நிறுவன தலைவர் சீனிவாசன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த சேப்பாக்கம் மைதானத்தில் அமைந்துள்ள
கேலரிக்கு முதல் முறையாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதுபோல ஏற்கனவே உள்ள 31140
இருக்கைகளுடன் புதிதாக 5306 இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 36446
இருக்கைகளுடன் சென்னை எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் புதுப்பொலிவுடன்
இன்று திறக்கப்பட்டது. மேலும் 655 நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடமும், 655 இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இதனையும் படியுங்கள்: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கருணாநிதி கேலரி ஏன்?- ஒரு பார்வை
இன்று திறக்கப்பட்ட எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22ம் தேதி
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு நடைபெற
உள்ளது. இதற்கான டிக்கெட் நாளை வழங்கப்பட உள்ளது. பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.