இந்தியா, உஸ்பகிஸ்தான் இடையே நீண்ட கால யுரேனியம் விநியோக ஒப்பந்தம் – பிரதமர் போடி அறிவிப்பு

இந்தியாவும், உஸ்பகிஸ்தானும் நீண்ட கால யுரேனியம் விநியோக ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளன.

வர்த்தகம், தூய்மையான எரிசக்தி மற்றும் இணைப்பு வசதி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக உஸ்பகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு தாஷ்கண்டில் உள்ள உஸ்பெக் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி கூறியதாவது, “”இந்தக் கட்டமைப்பிற்குள் உறுதியான இலக்குகளை நிர்ணயித்து நாங்கள் முன்னேறுவோம். இரு தலைவர்களும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினோம், பல முக்கிய முடிவுகளை எடுத்ததோம். இருதரப்பு ஒத்துழைப்பை மேற்பார்வையிடவும் வழிநடத்தவும், இரு நாடுகளும் தத்தமது வெளியுறவு அமைச்சர்களின் தலைமையில் ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதுள்ள கூட்டுக் குழுவும் செயலாளர் மட்டத்திலிருந்து அமைச்சர் மட்டத்திற்குத் தரம் உயர்த்தப்படும். இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த வணிகத் தலைவர்களை ஒன்றிணைக்கும் ஒரு வணிக உச்சிமாநாட்டை கூட்டாக நடத்த இரு தரப்பினரும் மேலும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் தங்களது உறவை ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் யுரேனியம் விநியோகத்திற்கான நீண்டகால ஏற்பாட்டை நோக்கி நகர்கின்றன. இந்தியா தனது குடிசார் அணுசக்தித் திட்டத்தின் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, உஸ்பெகிஸ்தானிலிருந்து யுரேனியம் விநியோகம் குறித்து ஆராய்ந்து வருகிறது . “நமது மூலோபாய கூட்டாண்மையின் 15வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகிறோம். இந்தச் சிறப்புமிக்க தருணத்தில், நமது உறவுகளை ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று பிரதமர் மோடி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.