போதை கலாச்சாரம் போற்றி வளர்கிறது – அண்ணாமலை

தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் போற்றி வளர்க்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.   திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் நிலவும் ஒவ்வொரு…

தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் போற்றி வளர்க்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

 

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் நிலவும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி அறிக்கை வாயிலாகவும், தங்கள் டிவிட்டர் பக்கங்களிலும் தெரிவித்து வருகின்றனர்.

 

அண்மையில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் வன்முறை சம்பவம் அரங்கேறியதற்கும், சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் செயல்படாததே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், குறிப்பாக திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து விட்டதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், தமிழ்நாட்டின் பாதை போதை ஆகிறது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், புத்தக பைகளை சுமந்த கைகள் தற்போது பொட்டலங்களை சுமக்கிறது என சாடியுள்ளார்.

கஞ்சா போதை அதிகரிப்பால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும் பாலியல் வன்முறைகளால் நெஞ்சு பதைக்கிறது என்றும் போதைக் கலாச்சாரம் போற்றி வளர்க்கிறது என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் போதையால் நிகழ்ந்த சம்பவங்களின் வீடியோ காட்சி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.