மதுரையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“திருநெல்வேலி மாஞ்சோலை, தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக வசிப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற மதுரைக் கிளை அளித்த உத்தரவின் பேரில், அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் என்ன? வாழ்வாதாரம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பதே புதிய தமிழகத்தின் பிரதான கோரிக்கை.
இன்று ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றி கழகத்தால் அதிக பெரும்பான்மை பெற முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களைத் தீவிரமாக எதிர்த்த கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். பிள்ளைகள் என்று பேசியவர்களோடு பொருந்தாத அணியாகச் சேர்ந்து இன்று இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கு உருப்படியாக ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை; 5 வருடத்தை ஓட்டுவதற்கான வழியை முதல்வர் விஜய் பார்க்க வேண்டுமே தவிர, பிரதமர், சர்வதேச தலைவர் என்று நினைப்பதெல்லாம் தவறான ஆசை” இவ்வாறு அவர் தெரிவிட்துள்ளார்.




