முக்கியச் செய்திகள் இந்தியா

இந்திய ஒற்றுமை நடைபயணம் – ராகுலுடன் இணைந்த பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கலந்து கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். இந்த ஒற்றுமை நடைபயணமானது காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சென்று நிறைவடையவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபயணத்தை நிறைவு செய்துள்ள ராகுல் காந்தி, நேற்று காலை, மத்தியபிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். பின்னர் மத்திய பிரதேசத்திற்குள் நடைபயணத்தை தொடர்ந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி 12 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், இன்று மத்திய பிரதேசத்தின் போர்கானில் இருந்து மீண்டும் தொடங்கியது. இதில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, அவர்களது மகன் ரைஹான் வத்ரா, காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்  ஆகியோரும் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 10-ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு

EZHILARASAN D

திடீரென தீப்பற்றிய கார்; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தாய், குழந்தை

Jayapriya

பிரான்ஸ் அதிபரின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்

Gayathri Venkatesan