முக்கியச் செய்திகள் தமிழகம்

உதயநிதி வெற்றியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்றார் உதயநிதி ஸ்டாலின். இந்த நிலையில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், “ தேர்தல் வேட்பு மனுவில் தவறான மற்றும் பொய்யான தகவல்களை உதயநிதி தெரிவித்துள்ளார், குறிப்பாக தனது வேட்பு மனுவோடு இணைத்து வழங்கும் படிவம்-26ல் தன் மீது எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என விவரம் கூறியுள்ளார், ஆனால் அந்த தகவல் என்பது பொய்யானது. ஏனெனில் உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன, எனவே அவர் வேட்பு மனுவில் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது முறையிட்டும், உதயநிதியின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை.இந்த விதிமீறல் புகாரை புறந்தள்ளிவிட்டு உதயநிதியின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக் கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

எனவே உதயநிதி வேட்புமனுவை ஏற்றது என்பது மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் தவறானது, இதனால் அவர் பெற்ற வெற்றியும் முறைகேடானது எனவும், இதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரிவினைவாதம் பேசும் ஆட்சி திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு

Dinesh A

ட்ரெண்டிங்கில் விஜய் ஆண்டனி பட பாடல்

EZHILARASAN D

தீரன் சின்னமலை நினைவு தினம்; அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

G SaravanaKumar