இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்தியா ஆடும் கடைசி டி20 தொடர் என்பதால் இந்திய வீரர்கள் தங்களை நல்ல நிலையில் தயார்படுத்துவதற்கு இந்த போட்டியை பயன்படுத்திக் கொள்ள தீவிரம் காட்டுவார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இதுவரை கைப்பற்றியதில்லை. இதனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.