இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1 செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
இந்நிலையில் நாவலில் மிகவும் புகழ் பெற்ற அருள்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். குறிப்பிட்ட இந்த கதாப்பாத்திரத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக காத்திறுக்கின்றனர். டீசர் மற்றும் ட்ரைலரை பார்க்கும் போதே ஜெயம் ரவி தனது உடல்பொழி, பேச்சு, மற்றும் சண்டை காட்டிகளின் மூலம் அருள்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தை கண்முன் நிருத்துகிறார். இதற்காக ஜெயம் ரவி தனது தோற்றத்தை மாற்றியதோடு போர்கலைகள் மற்றும் குதிரை என கதாப்பாத்திரத்திற்க்கு தேவையான அனைத்தையும் கற்றுகொண்டு திறன்பட நடித்துள்ளார் என்பதை காண முடிகிறது.
ஏனெனில் இவர் ஏற்று நடிக்கும் அருள்மொழி வர்மன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. பொன்னியின் செல்வனின் கதையின் மையக்கதாப்பாத்திரமான ராஜராஜன் என அழைக்கப்படும் அருள்மொழி வர்மன் இரண்டாம் பராந்தக சுந்தர சோழனுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர். பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்த கரிகால சோழன் மற்றும் குந்தவை தேவியின் தம்பியாகவும் அருள்மொழி வர்மன், அவசரம் ஆவேசம் கொண்டு எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் நண்பர்களின் கருத்துகளையும், மந்திரிகளின் ஆலோசனைகளையும் அறிந்து முடிவெடுப்பவராகவும், பெரியவர்களின் சொற்படி நடப்பவராகவும் அருள்மொழி வர்மனின் கதாபாத்திரத்தினை கல்கி தொகுத்திருப்பார். மேலும் சோழ நாடே “சோழ சாம்ராஜ்யத்தின் எதிர்காலமே அருள்மொழியால் வளப்பாடும்’ என்ற நம்பிக்கையில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
பத்தொன்பதே வயதான அருள்மொழி வர்மனின் தலைமையில் ஈழப்போருக்கு ஒரு பெரும்படை சோழதேசத்திலிருந்து சென்றது. ஈழம் சென்றடைந்த அருள்மொழி வர்மன் வெற்றிகளைக் குவித்து சோழ பேரரசை விரிவுபடுத்தினான். ஆனால் அதே சமயத்தில் ஈழப்போரில் சேதமடைந்த புத்த கோவில்களைச் சீரமைக்கத் தனது சொந்த செலவில் ஆட்களை வைத்துச் சரி செய்து கொடுத்துள்ளான். ஈழ மக்களுக்கு எந்தவித சேதமும் இல்லாமல் போர்க்களத்தில் மட்டுமே சண்டையிட்டு சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியதாக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகு அசாத்திய குணங்களைக் கொண்ட அருள்மொழி வர்மனின் கதாபாத்திரம் வரலாற்று ஏடுகளிலும், புத்தகங்களிலும் விரிவாகப் பதித்துள்ளனர். தற்போது இந்த கதாபாத்திரத்தை மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் திரையில் காணவுள்ளோம். மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. வரலாற்று ஆவணங்களும், புத்தகங்களும் போலவே மணிரத்னமும், படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியும் திரையில் சோழனின் பெருமையை மக்களிடம் சென்று சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








