26 ஓவராக குறைக்கப்பட்ட போட்டி : ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 136 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  இத்தொடரில்  3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது. நீண்ட இடைவெளிக்கு பின் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்குவதால் இப்போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உண்டானது

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதனிடையில் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால்,போட்டி 26 ஓவராக குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  26 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்களும் அக்‌ஷார் படேல் 31 ரன்களும் அறிமுக வீரரான நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்களும் விளாசினர். ஆஸ்திரேலிய அணியில் ஜாஷ் ஹாசில் உட், மிட்செல் ஓவன், மேத்யூ குஹனிமனின் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 131  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.