இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,87,62,976 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் நோய்த்தொற்றால் 3,498 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,08,330 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 2,97,540 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் மட்டும் 66,159 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 771 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் அடுத்தப்படியாக கேரளாவில் 38,607 பேர் மற்றும் கர்நாடகாவில் 35,024 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.







