முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது!

கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருப்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார். நாள்தோறும் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், வரும் காலங்களில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

தடுப்பூசியின் முதல் தவணை போட்டுக் கொண்டவர்கள் தவறாமல் இரண்டாவது தவணை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்டத்தில் 120 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மூன்று நாள் நடைபெறும் முகாம்களில் நாளொன்று 5 ஆயிரம் பேர் விதம் 15 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவெளியில் செல்லும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 3 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை, பத்தமடை சுவாமி சிவானந்தா மருத்துவமனை மற்றும் கூடங்குளம் அரசு மருத்துவமனை என மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 655 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சிவகங்கையில் செஞ்சிலுவை சங்கம், காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், சோப் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார், கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினர்.

Advertisement:

Related posts

பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

Karthick

குழந்தைகளிடம் கோவாக்சின் பரிசோதனை: மத்திய அரசு அனுமதி

Karthick

போலி மதுபானத்தை அருந்திய 3 பேர் பலி!