இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆறாயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று இப்போது சற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 7,145 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,47,33,194 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 289 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,77,158 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றுப் பாதிப்பில் இருந்து 8,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,41,71,471 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62,06,244 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 1,36,66,05,173 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.








