31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

காதலிக்க மறுத்தப் பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு: உயிரிழப்புக்கு முயன்ற வாலிபருக்கு தீவிர சிகிச்சை

காதலிக்க ம உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலறுத்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றுவிட்டு, இளைஞர் ம் கோழிக்கோடு அருகில் உள்ள திகோடியை சேர்ந்தவர் சிந்தூரி என்ற கிருஷ்ணப்பிரியா (22). முதுகலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், திகோடி பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கடந்த 8 நாட்களுக்கு முன் சேர்ந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (26). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில மாதங்களாக கிருஷ்ணப்பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒரு கட்டத்தில் தனது காதலை கிருஷ்ணப்பிரியாவிடம் தெரிவிக்க, அவர் ஏற்க மறுத்துவிட்டார். இருந்தும் தொடர்ந்து கிருஷ்ணப்பிரியாவை அவர் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திகோடி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு, கிருஷ்ணப் பிரியா வழக்கம்போல நேற்று காலை வந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த நந்தகுமார், மீண்டும் தனது காதலை ஏற்கும்படி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்து திட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திடீரென அவர் மீது ஊற்றி தீவைத்தார். அடுத்த நொடியே அலறி துடித்தார் அவர்.

இதற்கிடையே பஞ்சாயத்து அலுவகத்தின் வெளியே வந்த நந்தகுமார் தனது மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மருத்துவமனையின் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணப்பிரியா உயிரிழந்தார். நந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற ஒருதலை காதல் மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக கேரளாவில் பெண்கள் கொல்லப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

நாட்டின் நலனுக்காகவே சுயசார்பு இந்தியா திட்டம்; பிரதமர் மோடி கருத்து!

Saravana

சானியா மிர்சா, போபண்ணாவுக்கு இந்திய டென்னிஸ் சங்கம் கண்டனம்

Vandhana

”கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் டீசர்: படக்குழு வெளியிட்ட அப்டேட்!

Web Editor