இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு, தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையே,கடந்த சில நாட்களுக்கு முன், ஆறாயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று இப்போது சற்று அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 7,081 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. நேற்று 7,145 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், இன்று சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,47,40,275 ஆக அதிகரித்துள்ளது. இப்போதுவரை 83,913 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 264 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,77,422 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றுப் பாதிப்பில் இருந்து 7,469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,41,78,940 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 1,37,46,13,252 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








